sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

/

மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


ADDED : நவ 27, 2024 09:04 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'நிலத்தை அளக்க கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததால் குந்தா தாசில்தார், மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,' என, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பகுதியை சேர்ந்தவர் பீமன்,75. இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த, 2023ம் ஆண்டு ஜன., 13ம் தேதி தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து புல எல்லை வரையறை செய்து தருமாறு, இ--சேவை மையத்தில், 400 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார். நில அளவையர் நிலத்தை அளவை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், தாசில்தார் அதற்கான சான்றிதழ் வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

பலமுறை சென்றும் சான்றிதழ் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த பீமன், குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை அணுகினார். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக, சங்க செயலாளர் ஆல்துரை, நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நடுவர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவர் தங்கவேலு மற்றும் உறுப்பினர் சசிராஜா கொண்ட அமர்வு, 'ஒருமாத காலத்திற்குள் அவரது நிலத்திற்கான எல்லை வரையறையை செய்து தர வேண்டும். புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடாக, ரூ.10 ஆயிரம், வழக்கு செலவாக, 5 ஆயிரம் ரூபாய் ஒருமாத காலத்திற்குள் குந்தா தாசில்தார் வழங்க வேண்டும்,' என, உத்தரவிட்டது.

புகார்தாரருக்கு, எதிர்மனுதாரர் ஒரு மாத காலத்திற்குள் இந்தத் தொகையை தர வேண்டும். தவறும் பட்சத்தில், வழக்கு தொடுக்கப்பட்ட நாளில் இருந்து, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us