/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னூரில் தொடரும் பனிமூட்டம்: வாகனங்களை இயக்குவதில் சிக்கல்
/
குன்னூரில் தொடரும் பனிமூட்டம்: வாகனங்களை இயக்குவதில் சிக்கல்
குன்னூரில் தொடரும் பனிமூட்டம்: வாகனங்களை இயக்குவதில் சிக்கல்
குன்னூரில் தொடரும் பனிமூட்டம்: வாகனங்களை இயக்குவதில் சிக்கல்
ADDED : ஜன 02, 2024 10:31 PM

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் கடும் பனிப்பொழிவு இருப்பது வழக்கம். ஆனால் பனியின் தாக்கம் துவங்கிய நிலையில், மழை அதிகரித்தது.
தற்போது, புத்தாண்டு தினத்தில் இருந்து, பகல் நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதுடன் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தேயிலை தோட்டங்களில் அட்டை பூச்சி அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், குன்னுார் நகர், காந்திபுரம், காட்டேரி. பர்லியார் பகுதிகளில் தொடர்ந்து பனிமூட்டத்தில், மித வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மலை பாதையில் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.