/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் கனமழை சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடரும் கனமழை சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 18, 2025 04:50 AM

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, லேசான மழை பெய்தது. தொடர்ந்து, வெயிலான காலநிலை நிலவி, உஷ்ணம் அதிகரித்தது. தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்தது.
இந்நிலையில், நேற்று பகல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென கன மழை பெய்தது. இதேபோல, குன்னுார், ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால், உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. மேலும், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில், ஈரப்பதம் அதிகரித்தது. இதனால், பயிர்கள் செழித்து மகசூல் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.