/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் மழை பூங்கா ஏரியில்படகு சவாரி நிறுத்தம்
/
தொடரும் மழை பூங்கா ஏரியில்படகு சவாரி நிறுத்தம்
ADDED : நவ 14, 2024 09:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுாரில் தொடரும் மழையின் காரணமாக, சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதுடன் அவ்வப்போது மேகமூட்டமும் நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்கு பயன்படுத்தி இயங்கி வருகின்றன.
இதேபோல, சிம்ஸ்பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா மையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சிம்ஸ் பூங்காவில் உள்ள ஏரியில், படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால், கடைகளில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.