/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு; ஆயுத பூஜைக்கு கடை வைத்த வியாபாரிகள் 'அப்செட்'

ADDED : அக் 10, 2024 11:49 PM

கூடலுார் : கூடலுார் பகுதியில் தொடரும் மழையால், ஆயுத பஜை வியாபாரம் பாதிக்கப்பட்டது.
கூடலுார், பந்தலுார், முதுமலை, நடுவட்டம், மசினகுடி பகுதிகளில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் முதல் பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது.
இந்நிலையில், கூடலுார் பகுதியில் சில நாட்களாக பருவமழையின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுத பூஜையை முன்னிட்டு, அதிக விற்பனை எதிர்பார்த்து, சாலை ஓரங்களில் பூஜை பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ள சிறு வியாபாரிகள், விற்பனை இன்றி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பூஜை பொருட்கள் மழையில் நனையாமல் இருக்க வேண்டி, 'பிளாஸ்டிக்' போர்வையில் மூடி, வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சிறு வியாபாரிகள் கூறுகையில், 'ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள், அதிக விற்பனை இருக்கும் என எதிர்பார்த்து, சமவெளி பகுதிகளில் இருந்து எடுத்து வந்து விற்பனைக்கு வைத்துள்ளோம். ஆனால், தொடர் மழையின் காரணமாக, மக்கள் வருகை இன்றி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை ஆகவில்லை என்றால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்படும்,' என்றனர்.