/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு
/
கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு
கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு
கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு
ADDED : அக் 18, 2024 10:02 PM
கோத்தகிரி : கோத்தகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, விவசாயிகள் பசுந்தேயிலை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் ஈரத்தன்மை அதிகரித்து மகசூலும் உயர்ந்து வருகிறது.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 28 முதல், 32 ரூபாய் வரை விலை கிடைப்பதால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கோத்தகிரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று பகல் கன மழை பெய்தது. இரண்டு மணி நேரம் மழை தொடர்ந்ததால், விவசாய பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலையை பறிக்க முடியாமல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலைகள் முதிர்ந்து கரட்டு இலையாக மாற வாய்ப்புள்ளது.