/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் தொடரும் விதிமுறை மீறல்: விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்
/
மலைப்பாதையில் தொடரும் விதிமுறை மீறல்: விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்
மலைப்பாதையில் தொடரும் விதிமுறை மீறல்: விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்
மலைப்பாதையில் தொடரும் விதிமுறை மீறல்: விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்
ADDED : ஜன 30, 2024 10:40 PM
குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், வளைவுகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த நெடுஞ்சாலையில், சீசன் காலங்களில் வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் அதிவேகமாகவும், விதிமுறைகளை பின்பற்றாமலும் வரும் சில வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களால் பலரும் படுகாயம் அடைவதுடன், அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மலைபாதையில் செல்லும் போது வாகனங்களுக்கு உரிய இடங்களில் இடம் கொடுப்பதை அரசு பஸ் டிரைவர்கள் பின்பற்றுவதில்லை.
இதனால், அணிவகுத்து செல்லும் வாகனங்கள் திடீரென விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள குறுகிய வளைவுகளில், 'ஓவர்டேக்' செய்கின்றன. இதன் காரணமாகவும் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டும் வருகிறது.
அதே நேரத்தில், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலரும் இடது புறமாக 'ஓவர்டேக்' செய்வதால் மலைப்பாதை பள்ளத்தில் வாகனங்கள் உருண்டு செல்லும் அபாயம் உள்ளது.
போலீசார் கூறுகையில்,'சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பலரும் விதிமுறைகளை பின்பற்றாமல் வருவதால், இது போன்ற விபத்துக்கள் தொடர்கிறது. வளைவான இடங்களில் கட்டாயம் 'ஓவர் டேக்' செய்யக்கூடாது. குறுகிய வளைவுகளில், மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மெதுவாக அரசு பஸ்களும் இடம் கொடுக்க வேண்டும். அனைத்தும் வாகனங்களும் மிக வேகத்தில் செல்லவேண்டும்,' என்றனர்.