/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடர் விடுமுறை: முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
/
தொடர் விடுமுறை: முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை: முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை: முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 30, 2025 06:54 AM

கூடலுார்: பள்ளி மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக, முதுமலை யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர், தங்கள் வாகனங்களில் வனப்பகுதிக்கு சவாரி அழைத்து சென்று வருகின்றனர். தற்போது, பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் வனப்பகுதிக்கு சென்று வருகின்றனர். தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் யானைகளுக்கு உணவு கொடுப்பதை வெகுவாக ரசித்து சென்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காரணமாக, மாலை நேரத்தில் தெப்பக்காடு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து சீரமைக்கும் பணியில் மசினகுடி போலீசார் ஈடுபட்டனர்.

