/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இன்கோ' தேநீர் கடையால் சர்ச்சை; டி.எஸ்.பி.,யிடம் டிரைவர்கள் புகார்
/
'இன்கோ' தேநீர் கடையால் சர்ச்சை; டி.எஸ்.பி.,யிடம் டிரைவர்கள் புகார்
'இன்கோ' தேநீர் கடையால் சர்ச்சை; டி.எஸ்.பி.,யிடம் டிரைவர்கள் புகார்
'இன்கோ' தேநீர் கடையால் சர்ச்சை; டி.எஸ்.பி.,யிடம் டிரைவர்கள் புகார்
UPDATED : ஜன 23, 2025 11:42 PM
ADDED : ஜன 23, 2025 11:15 PM

குன்னுார்,; குன்னுார் சாமண்ணா பார்க் கார்கள் நிறுத்தும் இடத்தில், 'இன்கோசர்வ்' வாகனம் நிறுத்தி தேநீர் கடை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் சாமண்ணா பார்க் பகுதியில், வேன்கள் மற்றும் கார்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் திடீரென, இன்கோசர்வ் தேநீர் வாகனத்தை நிறுத்தி வியாபாரம் துவங்கப்பட்டது.
தேநீர் கடைக்கு ஆதரவாக சிலர் கட்டபஞ்சாயத்து செய்து, கார்களை நிறுத்த விடாமல் தடுத்து, மிரட்டி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்று இடத்தில் தேநீர் வாகனத்தை நிறுத்த கோரி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அங்கு மனுவை பெற்ற, டி.எஸ்.பி.,முத்தரசு, '' பேச்சு வார்த்தை நடத்தி ஆய்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.