/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகள் ரூ. 31 கோடியில் 'விறு விறு'
/
கூடலுார் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகள் ரூ. 31 கோடியில் 'விறு விறு'
கூடலுார் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகள் ரூ. 31 கோடியில் 'விறு விறு'
கூடலுார் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகள் ரூ. 31 கோடியில் 'விறு விறு'
ADDED : ஜன 14, 2024 11:04 PM

கூடலுார்;கூடலூர், அரசு தலைமை மருத்துவமனையில், புதிய கட்டடப் பணிகள் முடிந்தவுடன் கூடுதல் சிறப்பு பிரிவுகள் துவங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில், புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டதை அடுத்து, கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, 2022ல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
அதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்ட ஒரு பகுதியில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது. செப்., மாதம் நடந்த நிகழ்ச்சியில், புதிய கட்டடம் கட்டும் பணிகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டும் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கட்டடப் பணிகளை விரைந்து முடித்து, கூடுதலாக சிறப்பு பிரிவுகள் துவக்க வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கூடலூர் அரசு மாவட்ட மருத்துவமனை, 200 படுக்கைகள் வசதியுடன் கூடிய கட்டடங்கள் அமைக்க, முதல் கட்டமாக, 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கட்டடப் பணிகள் நிறைவு பெற்ற உடன், புதிதாக டயாலிசிஸ் பிரிவு, மனநல பிரிவு, அவசர சிகிச்சை, எலும்பு முறிவு, கண் சிகிச்சை, மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய பிரிவுகள் துவங்கப்படும்' என்றனர்.