/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் அந்தோணியார் திருத்தல திருவிழா
/
குன்னுார் அந்தோணியார் திருத்தல திருவிழா
ADDED : ஜூன் 20, 2025 06:29 AM
குன்னுார் : குன்னுார் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா நடந்தது.
குன்னுார் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த ஜூன், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும், பங்கு மக்கள் சார்பில், நவநாள் திருப்பலிகள், சிறுவர் சிறுமியருக்கு புது நன்மை, உறுதி பூசுதல் நடந்தன. முக்கிய பங்கு பெருவிழாவில், நோயல் ஸ்டீபன் ரோசாரியா ஆங்கிலத்திலும், புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை சேவியர் பாபு மலையாளத்திலும் திருப்பலிகள் நடத்தினர்.
பிஷப் கும்பகோணம் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை இடம் பெற்றது.
திருத்தலத்தில் துவங்கிய பவனி மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் திருத்தலத்தை அடைந்தது. பல இடங்களிலும் அந்தோணியார் சொரூபம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
ஏற்பாடுகளை, பங்குத்தந்தை யூஜின், உதவி பங்குத்தந்தையர் ஜேக்கப், பெரியநாயகம் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.