/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் காட்டேரி டேம் செலவிப் நகர்; முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஏப் 07, 2025 09:43 PM

குன்னுார்; குன்னுார் காட்டேரி டேம் செலவிப் நகரில், முத்து மாரியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது.
குன்னுார் காட்டேரி டேம் செலவிப்நகரில், அன்னை முத்துமாரியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டது.
கோவிலில் கடந்த, 3ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் புண்யாஹ வாசனம், மகா கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவற்றுடன் விழா துவங்கியது. கற்பக விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், யாக வேள்வி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமங்கள் நடந்தன.
கும்பாபிஷேக தின விழாவில், விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், 2ம் காலயாக வேள்வி, ஸ்பர் சாகுதி, மகாபூர்ணாஹுதி யாத்ரா தானம், மகா சங்கல்பம், தீர்த்த குடங்கள் புறப்பாடு நடந்தன. தொடர்ந்து. முத்துமாரியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 45 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது.