/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார்- ஊட்டி பஸ்கள் குறைவு; நாள்தோறும் பயணிகள் பரிதவிப்பு
/
குன்னுார்- ஊட்டி பஸ்கள் குறைவு; நாள்தோறும் பயணிகள் பரிதவிப்பு
குன்னுார்- ஊட்டி பஸ்கள் குறைவு; நாள்தோறும் பயணிகள் பரிதவிப்பு
குன்னுார்- ஊட்டி பஸ்கள் குறைவு; நாள்தோறும் பயணிகள் பரிதவிப்பு
ADDED : மே 19, 2025 08:49 PM

குன்னுார்; குன்னுார்- ஊட்டி இடையே அரசு பஸ்களை முறையாக இயக்காததால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
குன்னுார்-- ஊட்டி இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகிறது.
தற்போது, சீசன் துவங்கியுள்ள நிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் சிறப்பு பஸ்களாக சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. அதே சமயம், குன்னுார்- - ஊட்டி இடையே அரசு பஸ்கள் இயக்காமல் உள்ளதால் பயணிகள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். சில சமயங்களில் ஒரே நேரத்தில் வரும் இரு பஸ்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் பயணிக்கின்றனர்.
'எக்ஸ்பிரஸ்' பெயரில், விதிமீறலில் இயக்கப்படும் அரசு பஸ்களில், எம்.ஜி., காலனி, காணிக்கராஜ் நகர், பிக்கட்டி, கேத்தி ஷார்ட்கட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஊட்டி -குன்னுார் இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.