/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தார் சாலை பணிக்கு தடை விதித்து 'நோட்டீஸ்' குன்னுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை
/
தனியார் தார் சாலை பணிக்கு தடை விதித்து 'நோட்டீஸ்' குன்னுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை
தனியார் தார் சாலை பணிக்கு தடை விதித்து 'நோட்டீஸ்' குன்னுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை
தனியார் தார் சாலை பணிக்கு தடை விதித்து 'நோட்டீஸ்' குன்னுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜன 09, 2025 10:44 PM

குன்னுார்; குன்னுார் பர்லியார் குரும்பாடி பகுதியில் விதிகள் மீறி, தார் சாலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை, குரும்பாடி அருகே, வனவிலங்குகள் வாழ்விடம் மற்றும் வழித்தட பகுதிகளில் கடந்த, 2022ம் ஆண்டு, 55 ஏக்கர் தனியார் நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி மரங்கள் வெட்டி, மலையை குடைந்து மண்சாலை அமைக்கப்பட்டது.
இதனால், தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி நடந்த இந்த பணி தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் பணியில் இருந்து வருவாய் துறையினர் இருவர் 'சஸ்பெண்ட்' செய்தனர்.
மாநில முதல்வருக்கு பழங்குடியினர் மனு
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் போது இந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது, அப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் கட்டடம் வந்தால், தாழ்வான பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளை நிறுத்த, பழங்குடியின மக்கள் சார்பில் மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. 6ம் தேதி பழங்குடியின மக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், 'சொகுசு பங்களாக்கள் கட்டப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீறி தனியாரால், மலையை குடைந்து தார் சாலை அமைப்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், வயநாடு போன்று பேரிடர் அபாயம் உள்ளதால், இப்பணிகளை முழுமையாக தடை விக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட நிவாகத்தின் உத்தரவின் கீழ், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், எந்த அனுமதியும் பெறாமல் பணிகள் நடந்து வந்தது தெரிய வந்தது. இதனால், பணிகள் மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
அதில், 'தற்போது நிறுவனத்தால் மேற்கொண்ட பணிகளால் எதிர்காலத்தில் மனித உயிர் அல்லது வேறு எந்த பொது சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அனைத்திற்கும் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,' எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,''குரும்பாடி பகுதிகளில், அலமேலு சீனிவாசன் என்ற தனியார் நிறுவனம் அனுமதியின்றி மேற்கொண்ட பணிகளை, ஊராட்சி ஒன்றியத்தினர் தடுத்து நிறுத்தி நோட்டீஸ் வழங்கினர். கலெக்டருக்கு கடிதம் சமர்ப்பித்துள்ளனர்,'' என்றார்.