ADDED : ஏப் 14, 2026 10:40 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் சட்டசபை தொகுதியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், 838 பேரின் தபால் ஓட்டுக்கள் சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குன்னுார் சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுக்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதில், '436 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 402 மூத்த குடிமக்கள்,' என, மொத்தம், 838 தகுதியான வாக்காளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இப்பணிக்காக தொகுதியில், 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்ட, 14ம் தேதி வரை வீடுகளுக்கு சென்று நேரில் ஓட்டுக்கள் சேகரித்து வருகின்றனர். இப்பணியில், குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
