/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலங்களில் ஏற்றம் கோவை, கொச்சியில் சரிவு
/
குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலங்களில் ஏற்றம் கோவை, கொச்சியில் சரிவு
குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலங்களில் ஏற்றம் கோவை, கொச்சியில் சரிவு
குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலங்களில் ஏற்றம் கோவை, கொச்சியில் சரிவு
ADDED : பிப் 12, 2026 05:31 AM
குன்னுார்: தென்மாநில தேயிலை ஏலங்களில் நடந்த, 6வது ஏலத்தில் குன்னுார் 'டீசர்வ்' மையங்களில் விற்பனை மற்றும் வருவாய் அதிகரித்த நிலையில், கோவை மற்றும் கொச்சியில் சரிவை கண்டது.
குன்னுார் மையத்தில் நடந்த, 6வது தேயிலை ஏலத்தில், 8.62 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்தது. 8 லட்சம் கிலோ என 92.80 சதவீதம் தேயிலை துாள் விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 116 ரூபாய் என இருந்தது. 9.31 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டப்பட்டது.
கடந்த, 5வது ஏலத்தில், 7.1 லட்சம் கிலோ விற்பனையாகி, 8.19 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இம்முறை விற்பனை மற்றும் வருவாய் உயர்ந்துள்ளது. 'டீசர்வ்' மையத்தில், 86,057 கிலோ ஏலத்திற்கு வந்ததில்,100 சதவீதம் விற்பனையாகியது. சராசரி விலை கிலோவுக்கு 110 ரூபாய் என இருந்தது. மொத்த வருவாய், 95.50 லட்சம் ரூபாய் ஆகும்.
கடந்த வாரம், 43,756 கிலோ மட்டுமே விற்பனையான நிலையில் இந்த வாரம் விற்பனை இரு மடங்காக அதிகரித்து வருவாயும் உயர்ந்துள்ளது. கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 3.60 லட் சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 3.19 லட்சம் கிலோ என 88.59 சதவீதம் விற்பனையாகியது. சராசரி விலை கிலோவுக்கு, 158 ரூபாய் என இருந்தது. மொத்த வருவாய், 5.08 கோடி ரூபாய்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 5.52 கோடி ரூபாய் இருந்த வருவாய் சரிவை சந்தித்துள்ளது. கொச்சி மையத்தில், 7.72 லட்சம் கிலோ வரத்து இருந்தது. 7.36 லட்சம் கிலோ விற்பனையானது. அதிகபட்ச சராசரி விலையாக கிலோவுக்கு, 182 ரூபாய் 50 பைசா என இருந்தது. மொத்த வருவாய், 13.41 கோடி ஆகும். கடந்த ஐந்தாவது ஏலத்தில், 14.53 கோடி வருவாய் கிடைத்த நிலையில் இந்த வாரம், 1.12 கோடி ரூபாய் மொத்த வருவாய் குறைந்துள்ளது.
கை கொடுத்த குன்னுார் குன்னுார் மற்றும் டீசர்வ் மையங்களின் பங்களிப்பால், தென் மாநில ஏலங்களில், மொத்த விற்பனை அளவு கூடியது. கடந்த, 5வது ஏலத்தில், 18.9 லட்சம் கிலோ விற்பனையான நிலையில், இந்த ஏலத்தில், 19.43 லட்சம் கிலோ தேயிலை விற்பனையாகியுள்ளது.
மொத்த வருவாய் ஒப்பிடுகையில், கடந்த வாரம், 28.72 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த வாரம், 28.75 கோடி ரூபாயாக மிக சிறிய அளவு உயர்வு கண்டுள்ளது. கொச்சி மற்றும் கோவையில் ஏற்பட்ட சரிவை குன்னுார் மற்றும் டீசர்வ் மையங்களின் விற்பனை அதிகரிப்பு சமன் செய்துள்ளது.

