/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் பயன்பெற கூட்டுறவு உரக்கடை திறப்பு
/
விவசாயிகள் பயன்பெற கூட்டுறவு உரக்கடை திறப்பு
ADDED : மார் 19, 2025 08:07 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு விற்பனை சங்கத்தின் புதிய உர விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நடந்தது.
நீலகிரி மண்டல இணை பதிவாளர் தயாளன் உர விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில், ''நெல்லியாளம், மூனநாடு, குந்தலாடி, பாக்கனா, உப்பட்டி, பிதர்காடு, பாட்டவயல், அம்பலமூலா, முதிரக்கொல்லி, நெலாக்கோட்டை, பெரும் பள்ளி, விலங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் உள்ளனர்.
இவர்களுக்கு தற்போது உரம் கூட்டுறவு துறை மூலம் வழங்க வேண்டுமானால், கூடலுார் பகுதிக்கு செல்ல வேண்டும். இதனை மாற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில், தற்போது முக்கட்டி பகுதியில் கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்படும், உர கிடங்கை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவுவிற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள் கார்த்திகேயன், நிசார் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடன் இருந்தனர்.