/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு வார விழா விற்பனை மேளா; பிற மாவட்ட பொருட்களும் விற்பனை
/
கூட்டுறவு வார விழா விற்பனை மேளா; பிற மாவட்ட பொருட்களும் விற்பனை
கூட்டுறவு வார விழா விற்பனை மேளா; பிற மாவட்ட பொருட்களும் விற்பனை
கூட்டுறவு வார விழா விற்பனை மேளா; பிற மாவட்ட பொருட்களும் விற்பனை
ADDED : நவ 21, 2024 09:01 PM
கோத்தகிரி; கூட்டுறவு வார விழாவின் ஒரு பகுதியாக, கோத்தகிரியில் விற்பனை மேளா நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூட்டுறவு ஒன்றியம் சார்பில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; நீலகிரி கூட்டுறவு நிறுவனம்; கோத்தகிரி மலைவாழ் பழங்குடியினர் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம்; கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை சார்பில் விற்பனை மேளா கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
மேளாவில் என்னென்ன பொருட்கள்
அதில், கூட்டுறவு தயாரிப்புகளான அரசு உப்பு, ஊட்டி தேயிலை துாள், பசுமை ஆயில், தேன், மங்கலம் மசாலா பொருட்கள், ஆவின் தயாரிப்புகளான நெய், பிஸ்கட்; திருச்செங்கோடு வைக்கப்பட்டது.
மேலும், வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்புகளான உளுந்து, ஆயில் சோப் உட்பட பல வகை பொருட்கள் வைக்கப்பட்டன.
கோத்தகிரி லேம்ப்ஸ் சங்கத்தின் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளான இயற்கை குளியல் சோப்பு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
விற்பனை மேளாவை, நீலகிரி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் அய்யனார் தொடங்கி வைத்தார். நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் கூட்டுறவு சார் பதிவாளர் திவ்யா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.