/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வார்டு பணிகளை இழுத்தடிக்கும் ஒப்பந்ததாரர்கள்: 'பிளாக் லிஸ்டில்' சேர்க்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ADDED : மார் 12, 2024 11:22 PM
ஊட்டி:'வார்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கும் ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்டில் சேர்க்க வேண்டும்,' என, கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ், துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அனைத்து நடைப்பாதை பகுதிகளிலும் செடிகள் ஆக்கிரமித்து பாதை தெரியாத அளவுக்கு உள்ளன.
நகராட்சி வார்டுகளில் தெரு விளக்கு, பாதாள சாக்கடை அடைப்பு, நடைபாதைகள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. நகராட்சியில் சில ஒப்பந்ததாரர்கள் நிதி ஒதுக்கிய பணிக்கு வேலை செய்யாமல், ஆண்டு கணக்கில் இழுத்தடித்து வருகின்றனர். இது போன்ற ஒப்பந்ததாரர்களை 'பிளாக் லிஸ்டில்' சேர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
கமிஷனர் ஏகராஜ் பேசுகையில், ''வார்டு பகுதிகளில் அடிப்படை தேர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் படிப்படியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஒதுக்கப்பட்ட பணிகளை செய்யாமல் இழுத்தடித்து வரும் ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.