தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : மார் 12, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி ஊராட்சியில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், 8 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை நவ இந்தியாவில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தினர் சார்பில் சின்னதடாகம் அருகே வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பதி, கீழ்பதி, வீரபாண்டி புதூர் ஆகிய இடங்களில், 7 நாள் முகாம் நடந்தது.

இதில், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, 4 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. நூலகத்துக்கு, 3 ஆயிரம் புத்தகங்கள் வழங்குதல், வர்ணம் பூசுதல், சுவர் சித்திரங்கள் வரைதல் என, 4 லட்ச ரூபாய் மதிப்பு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இலவச மருத்துவ முகாம்கள் நடந்தன.

வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி ஆகியோர் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான பாராட்டு சான்றிதழை நவஇந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமாரிடம் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், பிரவீன்குமார், சஹானா பாத்திமா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us