/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலி தாக்கி பசுமாடு பலி; அதிர்ச்சியில் கிராம மக்கள்
/
புலி தாக்கி பசுமாடு பலி; அதிர்ச்சியில் கிராம மக்கள்
புலி தாக்கி பசுமாடு பலி; அதிர்ச்சியில் கிராம மக்கள்
புலி தாக்கி பசுமாடு பலி; அதிர்ச்சியில் கிராம மக்கள்
ADDED : ஜூலை 31, 2025 09:27 PM
கூடலுார்; கூடலுார், சர்கார்மூலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், உலா வரும் புலி, கடந்த சில வாரங்களில், 10 மாடுகளை தாக்கி கொன்றது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேவர்சோலை முரயுலாவு பகுதியை சேர்ந்த பழங்குடி பெண் பிந்துவுக்கு சொந்தமான பசுமாட்டை, நேற்று மதியம், 12:00 மணிக்கு புலி தாக்கியது.
அதனை பார்த்து சிலர் சப்தமிட்டனர். புலி அங்கிருந்து சென்றது. தகவல் அறிந்த மசினகுடி இன்ஸ்பெக்டர் சுப்பரத்தினம், வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வன ஊழியர்கள், மக்களை சமானப்படுத்தினர். காயமடைந்த பசுமாட்டுக்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி பசுமாடு உயிரிழந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'இங்குள்ள விலங்கு குறித்து கண்காணிப்பு பணி நடக்கிறது. மக்கள் கால்நடைகளை, எஸ்டேட் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

