UPDATED : ஆக 30, 2026 07:28 PM
ADDED : ஆக 30, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
ஊட்டி:ஊட்டி அருகே உள்ள முத்தோரை பாலடா, திமந்த் தோடர் காலனி பகுதியில் இரு காட்டெருமைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஒரு காட்டெருமை பலத்த காயமடைந்தது.
இதுகுறித்த தகவலின் பெயரில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த ஊட்டி தெற்கு வனச்சரகர் ரங்கராஜன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை வட்டார இணை இயக்குனர் மருத்துவர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் படுகாயம் அடைந்த காட்டெருமைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இல்லாமல் காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
