/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜார் சாலையில் உலா வந்த மாடுகள் --உரிமையாளர்களுக்கு அபராதம்
/
பஜார் சாலையில் உலா வந்த மாடுகள் --உரிமையாளர்களுக்கு அபராதம்
பஜார் சாலையில் உலா வந்த மாடுகள் --உரிமையாளர்களுக்கு அபராதம்
பஜார் சாலையில் உலா வந்த மாடுகள் --உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : ஏப் 23, 2025 10:16 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் பகுதியில் கால்நடைகளை மேய விட்ட, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பந்தலுார் பஜார் பகுதியில், கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டுனர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் வரும்போது சாலையின் குறுக்கே, வரும் கால்நடைகளால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, பந்தலுார் வியாபாரிகள் சங்கம் வளர்ச்சி குழு சார்பில் மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, இது குறித்து நடவடிக்கை எடுக்க தேவாலா போலீசார், நெல்லியாளம் நகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில், உலா வந்த ஏழு மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சியில் கட்டப்பட்டது. மேலும், மாடுகளை மசினகுடியில் உள்ள கோசலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது, கால்நடை உரிமையாளர்கள், 'இனி தங்கள் கால்நடைகளை, பஜார் பகுதியில் விடமாட்டோம்,' என, உத்தரவாதம் அளித்தனர்.
ஒவ்வொரு மாட்டிற்கும் தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

