UPDATED : அக் 15, 2026 06:26 PM
ADDED : அக் 15, 2026 06:24 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் வி.பி. தெருவில் ஆற்றோரம் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததுடன், விரிசலாகும் சாலையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் வி.பி. தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவில் அருகே செல்லும் பிரதான சாலை திடீரென உள்வாங்கி, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சாலைக்கு அருகே ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரும் பலமிழந்து இடிந்து விழுந்துள்ளது. இதனால் சாலையின் அடிப்பகுதி மேலும் பலவீனமடைந்து, எந்நேரமும் சாலை முற்றிலும் துண்டிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
