/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிரைம் செய்தி:உரிமையாளரை தாக்கிய ஊழியர் கைது
/
கிரைம் செய்தி:உரிமையாளரை தாக்கிய ஊழியர் கைது
ADDED : ஜன 20, 2024 01:30 AM
ஊட்டி:ஊட்டி காந்தள் போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ,39, மிஷ்னரி ஹில் பகுதியில் காட்டேஜ் நடத்தி வருகிறார். இவரது காட்டேஜில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. பயணிகளை தங்க வைப்பது தொடர்பாக, கார்த்திக்குக்கும் ஊழியர் விக்னேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்னர் வாக்குவாதம் தகராறாக மாறியதால் விக்னேஷ், கார்த்திக்கை தாக்கி உள்ளார். மேலும், காட்டேஜ் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார். கர்த்திக் பி1 போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தகராறை தடுத்தவருக்கு அடி உதை
ஊட்டி, ஜன. 20-
ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 29, ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்ரீத், அல்தாப் மற்றும் சுதர்சன் ஆகியோர் டாஸ்மாக் கடை முன் நின்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதை பார்த்த பிரவீன்குமார் தகராறை விலக்கி விட முயன்றார்.
தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்ரீத் உட்பட மூன்று பேர் பிரவீன் குமாரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஜி 1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.