தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிரைம் செய்தி... நீலகிரி மாவட்டம்

கிரைம் செய்தி... நீலகிரி மாவட்டம்

கிரைம் செய்தி... நீலகிரி மாவட்டம்


UPDATED : அக் 11, 2026 06:40 PM

ADDED : அக் 11, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:40 PM ADDED : அக் 11, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி தற்கொலை!

ஊட்டி அடுத்த கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த சிவராஜ்,51, என்பவர் நீண்ட நாட்களாக மது குடித்து வந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு அறிவுரை கூறி மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவரால் மது பழக்கத்தை கைவிட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்தவர்கள் கோபித்துக் கொண்டு சென்றதால் மன வருத்தமடைந்த சிவராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதையடுத்து உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து ஊட்டி ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மீது வழக்கு பதிவு

பந்தலூர் அருகே அத்திச்சால் கிராமத்தில் மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் பலமுறை கடையை ஆய்வு செய்த போதும், புகையிலை பொருட்கள் சிக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை சேரம்பாடி போலீஸ் எஸ்.ஐ., வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடையின் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த, 200 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளர் ராணி, 54 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை!

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஷாகில்,22, இவர் தனது தாய் தந்தை மற்றும் உறவினர்களுடன் கேரட் வேலை செய்வதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கப்பத்தொரை பகுதியில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக அவருக்கு ஒரு சில பெண்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு பெண்ணை ஷாகில் காதலித்து உள்ளார். நேரில் பார்க்காவிட்டாலும் அந்தப் பெண்ணுடன் அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். இந்தநிலையில் ஷாகிலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் ஷாஹிலுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அவரை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்துவிட்டார். அதிருப்தி அடைந்த சாகில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us