தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலைஆற்றில் முதலை வனத்துறை எச்சரிக்கை

முதுமலைஆற்றில் முதலை வனத்துறை எச்சரிக்கை

முதுமலைஆற்றில் முதலை வனத்துறை எச்சரிக்கை


ADDED : செப் 14, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: ‘முதுமலை, மாயார் ஆற்றில் முதலைகள் உலா வருவதால், சுற்றுலா பயணிகள் ஆற்றுக்கு செல்ல வரை தவிர்க்க வேண்டும்,’என, எச்சரித்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில், பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. முதுமலை வழியாக செல்லும் மாயார் ஆற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், தெப்பக்காடு அருகே, பழங்குடியினர் கோவில் அருகே, மாயார் ஆற்றில் முதலை ஒன்று, காய்ந்த மரத்தில் நீண்ட நேரம் ஓய்வெடுத்தது. அதனை, சுற்றுலா ரசித்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘மாயார் ஆற்றில், முதலைகள் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள முதலைகள் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us