ADDED : மே 24, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக, நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடந்து முடிந்தது.
தவிர, இங்குள்ள சிறுவர் பூங்காவும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து செல்ல ஏதுவாக, ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு அம்சங்கள், சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக, பூங்கா புல்வெளி பசுமையாக காட்சியளிக்கிறது. பல்வேறு வண்ண மலர்களும் பூத்து குலுங்குகின்றன.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் கூட்டமாக பூங்காவுக்கு வந்து, இதமான காலநிலையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நேற்று மாலை கோத்தகிரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரும், பூங்காவின் அழகை கண்டுக்களித்து செல்கின்றனர்.