/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் கூட்டம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
/
சுற்றுலா பயணிகள் கூட்டம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
சுற்றுலா பயணிகள் கூட்டம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
சுற்றுலா பயணிகள் கூட்டம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : டிச 27, 2024 10:13 PM

ஊட்டி; தொடர் விடுமுறையால், ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.
பள்ளி அரையாண்டு விடுமுறையை ஒட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் , ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம்,தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணியர் வருகையை ஒட்டி, குன்னுார் சந்திப்பு, தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை, தலைக்குந்தா, கோத்தகிரி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
சில இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
ஊட்டி நகரில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்திருப்பதால், அதற்கு ஏற்றவாறு போக்குவரத்தில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணியர் தடையின்றி வந்து செல்லும் வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.