sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயிலில் பயணிக்க திரண்ட மக்கள் கூட்டம்

/

மலை ரயிலில் பயணிக்க திரண்ட மக்கள் கூட்டம்

மலை ரயிலில் பயணிக்க திரண்ட மக்கள் கூட்டம்

மலை ரயிலில் பயணிக்க திரண்ட மக்கள் கூட்டம்


ADDED : டிச 29, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; தொடர் விடுமுறையை ஒட்டி, மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணியர் திரண்டனர்.

குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலை, 7:45 மணி; பகல் 12:35 மணி; மாலை 4:00 மணி மற்றும் ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு காலை, 9:15 மணி; பகல் 12:15 மணி; மாலை 5:30 மணிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 4 பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில், குன்னுார் வந்ததும், கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, 5 பெட்டிகளுடன், காலை 10:40 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது.

இந்த ரயில் ஊட்டியில் மதியம், 2:10 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு செல்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஜன., 2ம் தேதி வரை சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, காலை, 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில், அடுத்த நாள், ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்கிறது. குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு காலை, 8:20 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு மாலை, 4:45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்'


இந்த ரயில், ஊட்டி --- கேத்தி இடையே, காலை, 9:45 மணி; காலை 11: 35 மணி; மாலை 3:00 மணி என தினமும், 3 முறை சுற்று ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. முன்பதிவு இல்லாத குறிப்பிட்ட சில இருக்கைகளுக்கு, நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று பயணிகள் செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us