/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் பரவிய கிரஷ் துாள் சறுக்கி விழுந்து பலரும் காயம்
/
சாலையில் பரவிய கிரஷ் துாள் சறுக்கி விழுந்து பலரும் காயம்
சாலையில் பரவிய கிரஷ் துாள் சறுக்கி விழுந்து பலரும் காயம்
சாலையில் பரவிய கிரஷ் துாள் சறுக்கி விழுந்து பலரும் காயம்
ADDED : செப் 30, 2025 10:12 PM
குன்னுார்,; குன்னுார் புளூ ஹில்ஸ் -உழவர் சந்தை சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயமடைகின்றனர்.
குன்னுார் மவுன்ட் ரோடு புளூ ஹில்ஸ் சாலையில் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட சாலையில், கிரஷ் துாள் கொட்டப்பட்டுள்ளது. இதில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் ஸ்கிட் ஆகி பலரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். சமீபத்தில் மாடல் ஹவுஸ் பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற பெண் விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின் ஜீவா என்பவர் ஸ்கூட்டி ஸ்கிட் ஆகி விழுந்து காயமடைந்தார். தொடர்ந்து, விபத்து ஏற்படுவதால் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.