தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தாய் புலி விட்டு சென்ற குட்டிகள் :நவீன கேமராவில் கண்காணிப்பு

 தாய் புலி விட்டு சென்ற குட்டிகள் :நவீன கேமராவில் கண்காணிப்பு

 தாய் புலி விட்டு சென்ற குட்டிகள் :நவீன கேமராவில் கண்காணிப்பு


ADDED : ஏப் 27, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அருகே குடிசைக்குள் இருந்த, புலி குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.

ஊட்டி வடக்கு வனச்சரக கல்லட்டி சோலாடா கிராம விவசாய நிலத்தில் உள்ள குடிசைக்குள், இரண்டு புலி குட்டிகள் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் அங்கு சென்று, இரண்டு புலிக்குட்டிகள் குடிசைக்குள் இருப்பதை உறுதி செய்தனர். இப்பகுதியில் தாய் புலி உயிருடன் உள்ளதா? அல்லது இறந்து விட்டதா? என, வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், தாய் புலி அப்பகுதிக்கு வராததாலும், குட்டிகள் மிகவும் சோர்வுடன் இருப்பதாலும், அவற்றைப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

குடிசைக்குள் இருந்த ஒரு புலி குட்டியை பத்திரமாக மீட்டனர். மற்றொரு புலிக்குட்டி அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்ததால், அதனை பிடிக்க முடியவில்லை. தாய் புலி குட்டியை தேடி குட்டிகள் இரண்டு நாட்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இருப்பினும், நேற்று, பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் புலி குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கால்நடை மருத்துவர் பராமரிப்பில் கண்காணித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us