/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை
/
கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை
கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை
கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை
ADDED : ஆக 25, 2025 09:08 PM
ஊட்டி; நீலகிரி கால்பந்து சங்கத்தின் சார்பில் நடந்த போட்டி களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் டிவிஷனுக்கான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சாம்பியன் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சங்கத்தில் பதிவு பெற்ற, 82 அணிகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் லீக் போட்டிகளில் பல சுற்றுகளில் தங்களது திறமைகளை காட்டி வருகின்றன.
இந்நிலையில், நடப்பாண்டு நடந்த கால்பந்து போட்டியில் முதல் டிவிஷன் போட்டியில், நீலகிரி ப்ளூஸ் அணி, இரண்டாவது டிவிஷன் போட்டியில் ஆர்வெஸ்டர் அணி, மூன்றாவது டிவிஷன் போட்டியில் புல்சன் எப்.சி., அணிகள் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றன.
13, 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட 'யூத் லீக்' போட்டிகளில் வெற்றி பெற்ற செய்ன்ட் ஜோசப் அணி, சென்னை சூப்பர் ஸ்ட்ரைக்கர் மற்றும் லாரன்ஸ் பள்ளி அணிகள் முதலிடத்தை பெற்று நடப்பாண்டுக்கான நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகத்தின் கேடயங்களை பெற்றன.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் 'உட்சைடு' பள்ளியின் தலைவர் பால லிங்கய்யா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து கழகத்தின் தலைவர் மணி, செயலாளர் மோகன் முரளி, பொருளாளர் நாகராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.