வங்கி திறப்பதில் தாமதம் வாடிக்கையாளர்கள் அப்செட்
வங்கி திறப்பதில் தாமதம் வாடிக்கையாளர்கள் அப்செட்
ADDED : பிப் 03, 2026 05:47 AM

குன்னுார்: குன்னுார் இந்தியன் வங்கியில் சாவி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒன்றரை மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருந்து பாதிக்கப்பட்டனர்.
குன்னுார் சாமண்ணா பார்க் அருகே இந்தியன் வங்கி உள்ளது. தினமும், 9:50 மணிக்கு முன்னதாக வங்கி திறக்கப்படும் நிலையில், நேற்று காலையில் வங்கி திறக்கப்படாததால், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.
இதனால், குறைவாக பணம் எடுக்க வந்தவர்களுக்கு, 'ஸ்வைப்பிங் மிஷின்' வைத்து பணம் வழங்கப்பட்டது. எனினும், பணம் செலுத்த வந்தவர்கள், நகைக்கடன் வைக்க வந்தவர்கள் என பலரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல், முதியவர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் காத்திருந்து சிரமப்பட்டனர். காலை, 11:35 மணிக்கு சாவி வரவழைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அங்கு வந்த ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் நடத்திய விசாரணையில், 'சாவியை எடுத்து சென்றவரால் தாமதம் ஏற்பட்டது,' என, தெரியவந்தது.
