/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டாய்ச்சி' பயிற்சி முகாம்; மாணவர்களுக்கு சான்றிதழ்
/
'டாய்ச்சி' பயிற்சி முகாம்; மாணவர்களுக்கு சான்றிதழ்
'டாய்ச்சி' பயிற்சி முகாம்; மாணவர்களுக்கு சான்றிதழ்
'டாய்ச்சி' பயிற்சி முகாம்; மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : அக் 23, 2024 09:56 PM

குன்னுார் : குன்னுாரில் 'டாய்ச்சி' பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் டாய்ச்சி' பயிற்சி பள்ளி சார்பில், நாடு முழுவதும் 'டாய்ச்சி' பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் நகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் இந்த பள்ளி சார்பில், டாய்ச்சி பயிற்சி முகாம் நடந்தது.
முகாமுக்கு, தலைமை வகித்த குன்னுார் மாருதி ஷிட்டோ ரியு கராத்தே பள்ளி இயக்குனர் ரென்சி பழனிவேல் பேசுகையில், ''சீனாவின் டாய்ச்சி தற்காப்பு பயிற்சி என்பது, மிகவும் மெதுவான அசைவுகளுக்கும், உள்நோக்கிய பார்வைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உடல் நலம் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்காக இந்த தற்காப்பு கலை பிரபலமாக உள்ளது,'' என்றார். பயிற்சி பள்ளி கிராண்ட் மாஸ்டர் வேலப்பன் பயிற்சி அளித்தார். இதில், 11 மாணவ மாணவியர் பயிற்சியை பெற்று சான்றிதழ் பெற்றனர். ஏற்பாடுகளை சிறப்பு பயிற்சியாளர் சென்சாய் இணையத்துல்லா உட்பட பலர் செய்திருந்தனர்.