/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலையில் நாள்தோறும் சாகச பயணம்; கிராம மக்கள் கடும் அதிருப்தி
/
சேதமடைந்த சாலையில் நாள்தோறும் சாகச பயணம்; கிராம மக்கள் கடும் அதிருப்தி
சேதமடைந்த சாலையில் நாள்தோறும் சாகச பயணம்; கிராம மக்கள் கடும் அதிருப்தி
சேதமடைந்த சாலையில் நாள்தோறும் சாகச பயணம்; கிராம மக்கள் கடும் அதிருப்தி
ADDED : அக் 08, 2025 10:04 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பெக்கி- -மாங்கம் வயல் சாலை முழுமையாக சேதமடைந்து உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெக்கி அமைந்துள்ளது. - இந்த சாலை முழுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த வழியாக அரசு பஸ் வசதி இல்லாத நிலையில், ஆட்டோ மற்றும் வாடகை ஜீப் பயன்படுத்தி மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வரும் நிலையில், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல வரும் தனியார் வாகனங்களும், சாலை சேதமானதால் கிராமங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த சாலையை சீரமைத்து தர பெக்கி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி இருந்தார்.
ஆனால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வழங்கிய பதில் கடிதத்தில், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு பதிலாக, 'சேரங்கோடு ஊராட்சியில் உள்ள சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் நிதி கோரப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில்,' நெலக்கோட்டைக்கு வர வேண்டிய நிதி சேரங்கோடு பகுதிக்கு செல்வதற்கு முன்பு, அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.