/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்
/
நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்
நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்
நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்
ADDED : செப் 23, 2024 10:32 PM

ஊட்டி : நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு, 90 சதவீதம் இருப்பதால் தினசரி மின் உற்பத்தி, 600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், பைக்காரா, அவலாஞ்சி, காட்டுகுப்பை, சிங்காரா உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன.
'முக்கூறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார்,' என, 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.
இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், மொத்தமுள்ள, 32 பிரிவுகளின் கீழ், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
ததும்பும் அணைகள்
நடப்பாண்டு துவக்கத்தில் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு, 30 சதவீதம் தான் இருந்தது. அதிகபட்சமாக, 150 முதல், 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தென் மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி தொடர்ச்சியாக பெய்தது.
இதனால், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உட்பட பிற அணைகளில் தற்போது, 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.
கடந்த இரு வாரங்களாக தினசரி மின் உற்பத்தி, 500 முதல், 600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, ஈரோடு, மதுரை மற்றும் சென்னையில் உள்ள மின் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மின் மையத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ' நடப்பாண்டு துவக்கத்தில் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது. தென் மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால், தினசரி, 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையால், 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் கிடைத்தால், இன்னும், 6 மாதங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.