/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு
/
சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, பைக்காரா அருகே, நேற்று காலை, 9:30 மணிக்கு, மரம் விழுந்து அதனை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
ஊட்டி தீயணைப்பு நிலை அலுவலர் ஸ்ரீதர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி, மரம் மற்றும் மண்ணை அகற்றி பகல், 12:00 மணிக்கு வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.