/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் வீணாக கிடக்கும் பால் கொள்முதல் மையத்தால் பாதிப்பு
/
கோத்தகிரியில் வீணாக கிடக்கும் பால் கொள்முதல் மையத்தால் பாதிப்பு
கோத்தகிரியில் வீணாக கிடக்கும் பால் கொள்முதல் மையத்தால் பாதிப்பு
கோத்தகிரியில் வீணாக கிடக்கும் பால் கொள்முதல் மையத்தால் பாதிப்பு
ADDED : செப் 14, 2025 10:30 PM

கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை பால் கொள்முதல் மைய கட்டடம், புதர் ஆக்கிரமித்து வீணாகியுள்ளது.
பில்லிக்கம்பை, ஒன்னதலை, சக்தி நகர், கலிங்கனட்டி உட்பட, சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் நலன் கருதி, 1988ம் ஆண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதில், பல ஆண்டுகளாக, 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் கொள்முதல் செய்து வந்தனர்.
நாளடைவில், கறவை மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததால், சங்க கட்டடம் மூடப்பட்ட நிலையில், சுவர் சேதம் அடைந்து, காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது வீணாகி வருகிறது. இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது.
எனவே, சங்க கட்டடத் தை சீரமைத்து, அரசின் பிற துறைகளின் பயன்பாட்டிற்காக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.