/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகரில் உலா வரும் கால்நடைகளால் பாதிப்பு
/
ஊட்டி நகரில் உலா வரும் கால்நடைகளால் பாதிப்பு
ADDED : ஜூன் 30, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலக சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் உலா வரும் கால்நடைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி சுற்றுலா தலமாக உள்ளதால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கலெக்டர் அலுவலக சாலை, தாவரவியல் பூங்காசாலை, கமர்ஷியல் சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் குதிரை, மாடு, எருமைகள் அதிகளவில் உலா வருவதால் வாகனங்கள் செல்லவும், மக்கள் நடமாடவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.