/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு
ADDED : ஏப் 27, 2025 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் அகற்றப்பட்டு, தடுப்புடன், இருக்கைகள் அமைக்கப்பட்டன. அந்த இடத்தில் அவ்வப்போது வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு சுற்றுலா வாகனங்களை நிறுத்தினால் போலீசார் அபராதம் விதித்தும் வருகின்றனர். அவ்வப்போது, ஆட்டோ நிறுத்துவதால் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர். எனவே, இங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.