sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடை மழையில் அடித்து செல்லும் கற்களால் பாதிப்பு; சீசனின் போது நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்?

/

கோடை மழையில் அடித்து செல்லும் கற்களால் பாதிப்பு; சீசனின் போது நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்?

கோடை மழையில் அடித்து செல்லும் கற்களால் பாதிப்பு; சீசனின் போது நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்?

கோடை மழையில் அடித்து செல்லும் கற்களால் பாதிப்பு; சீசனின் போது நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்?


ADDED : மார் 19, 2025 08:16 PM

Google News

ADDED : மார் 19, 2025 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: ஊட்டி தேசிய நெடுஞ் சாலையில் பல பகுதி களில் சாலை விரிவாக்க பணிகள்; சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் கோடை சீசனின் போது, பல்லாயிரம் வாகனங்கள் வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊட்டி- குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சாலையோரம்செங்குத்தாக மண் தோண்டப் பட்டு, மழை நீர் செல்லும் கல்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டது.

அதில், அருவங்காடு பகுதியில் சாலையோரம் விரிவாக்கம் செய்த இடத்தில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழை காலங்களில் மண்சரிவுகள் ஏற்படுவதுடன், போடப்பட்ட கற்களும் மழை நீரில் அடித்து சென்று வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையில், சாலையோரம் இருந்த கற்கள் பெரும்பாலும் அடித்து செல்லப்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, இந்த ஜல்லிகற்கள். சாலையில் நடுவிலும் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறது.

டிரைவர்கள் கூறுகையில்,'ஊட்டிக்கு செல்லும் முக்கிய சுற்றுலா வழித்தடமாக உள்ள இந்த சாலையில், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

தற்போது, மழையின் காரணமாக பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதையும், சாலையில் ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதையும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், அகற்றி சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அதேசமயம், வி.ஐ.பி.,க்கள் வரும்போது மட்டும் அவசர கதியில் தற்காலிக பணிகளை மேற்கொள்கின்றனர். பர்லியார் பகுதியில் உள்ள குறுகிய சாலைகளாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது,' என்றனர்.

சமூக ஆர்வலர் ராஜன் கூறுகையில், ''குன்னுார்- -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியார் பகுதியில் விரிவாக்கம் செய்யப்படாமல் மிகவும் குறுகலாக உள்ளது.

இங்கு வார இறுதி நாட்களில், வாகனங்கள் சிக்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஒரு மணி நேரம் வரை தாமதமாக செல்ல வேண்டியுள்ளது.

ரயில் மற்றும் விமானங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கிக் கொள் கின்றனர். கோடை சீசன் துவங்கினால் இங்கு மேலும் அதிக பாதிப்பு ஏற்படும்.

இந்த பகுதியில் விரிவாக்கம் செய்யப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மேலும், ஊட்டி- குன்னுார் நெடுஞ்சாலையில் சேதமான பணிகளை சீரமைக்க வேண்டும்,'' என்றார்.

விரைவில் சீரமைக்க முடிவு...

தேசிய நெடுஞ்சாலை மண்டல பொறியாளர் செல்வம் கூறுகையில்,''மலை பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதி கள்; பணிகள் நிறைவு செய்யப்படாத பகுதிகளில் உடனடியாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாலை குறுகிய இடங்கள் குறித்தும் ஆய்வு செய்ய ப்படும். ஓரிரு மாதங்களில், நெடுஞ்சாலையில் பிற பெரிய பணிகள் துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.








      Dinamalar
      Follow us