தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வனத்தீயில் புல்வெளிகள் எரிந்து பாதிப்பு

வனத்தீயில் புல்வெளிகள் எரிந்து பாதிப்பு

வனத்தீயில் புல்வெளிகள் எரிந்து பாதிப்பு


ADDED : ஜன 18, 2024 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் : கூடலுார் பகுதியில் இரவு மற்றும் அதிகாலையில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக, வனப்பகுதியில் புல்வெளிகள் பசுமையிழந்து கருக துவங்கி உள்ளன. இதனால், தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே உள்ள, வனப்பகுதியில், நேற்று, மாலை, 4:15 மணிக்கு வனத்தீ ஏற்பட்டது. தகவல் அறிந்த வன காவலர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன் வனத்தீயை கட்டுப்படுத்தினர். வனத்தீயில் கால் ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் எரிந்து நாசமானது.

வனத்துறையினர் கூறுகையில், 'வனத்தீ குறித்த தகவல் கிடைத்த உடன், வன ஊழியர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி, அவை மேலும் பரப்புவதை தடுத்தனர். வனத்தீ ஏற்படுவது தடுக்க வனத்துறை எடுத்து வரும், நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us