/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதை, கழிவுநீர் திட்ட பணியில் பாதிப்பு
/
நடைபாதை, கழிவுநீர் திட்ட பணியில் பாதிப்பு
ADDED : பிப் 17, 2024 12:19 AM
குன்னுார்:'குன்னுார், 26வது வார்டு நடைபாதை, கழிவுநீர் கால்வாய் பணிகளை எஸ். ஏ.டி.பி., திட்டத்தின் கீழ் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட மிஷின் ஹில் பகுதியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம், கோவில், சர்ச் உட்பட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு நடைபாதை சேதமாகி மக்கள் நடமாட சிரமம் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேங்கி பாதிப்பாகிறது.
மழை நீர் நடை பாதையில் ஓடுகிறது. நிதி ஒதுக்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதி கவுன்சிலர் ராஜ்குமார் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில்,' எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில் வந்த பணி நிறைவு பெறாமல் உள்ளது.
சேதமடைந்த இடங்களை விட்டு, நன்றாக உள்ள இடத்தில் பணிகள் செய்யப்படுகிறது. நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.