/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேட்லாடா கிராம சாலை சேதம்; பொதுமக்கள் புலம்பல்
/
பேட்லாடா கிராம சாலை சேதம்; பொதுமக்கள் புலம்பல்
ADDED : ஜூன் 30, 2025 10:07 PM

கோத்தகிரி; கோத்தகிரி பேட்லாடா சாலை, மிகவும் மோசமாக உள்ளதால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, பேட்லாடா கிராமத்தில், 100 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு செல்லும் சாலை, 200 மீட்டர் சாலை, மிகவும் சேதம் அடைந்து மோசமாக உள்ளது.
இதனால், வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மற்றும் முதியோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை சேதமடைந்த காரணமாக, கிராம மக்கள், 15 கி.மீ., சுற்றி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.