/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஸ்பென்ஷர்' சாலையில் சேதமடைந்த தடுப்பு; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளால் அதிருப்தி
/
'ஸ்பென்ஷர்' சாலையில் சேதமடைந்த தடுப்பு; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளால் அதிருப்தி
'ஸ்பென்ஷர்' சாலையில் சேதமடைந்த தடுப்பு; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளால் அதிருப்தி
'ஸ்பென்ஷர்' சாலையில் சேதமடைந்த தடுப்பு; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளால் அதிருப்தி
ADDED : அக் 09, 2025 11:54 PM

ஊட்டி; ஊட்டி ஸ்பென்ஷர் சாலை நடைபாதையில் சேதமடைந்து காணப்படும் தடுப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் சாலை பிரதான சாலையாக உள்ளது. இங்கு, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பென்ஷர் சாலை பகுதியில் இருபுறத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைப்பாதை வசதி ஏற்படுத்தி, சில்வர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதி தடுப்பு சேதமடைந்தது. நடைப்பாதையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. உடைந்த சில்வர் தடுப்பை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள இச்சாலையில், கலெக்டர், எஸ்.பி.,நகராட்சி கமிஷனர், தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நாள்தோறும் சென்று வருகின்றனர். உடைந்த சில்வர் தடுப்பை சீரமைப்பது குறித்து யாரும் கண்டு கொள்ளாமல் செல்வது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதியில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டி நகரின் பாரம்பரியத்தை ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளண் அதிகளவில் வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் சேதமடைந்து கிடக்கும் தடுப்பை சீரமைக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.