/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த தீட்டுக்கல் சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
/
சேதமடைந்த தீட்டுக்கல் சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : ஜூலை 25, 2025 08:30 PM

ஊட்டி; ஊட்டி தீட்டுக்கல் சாலையில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் அதிகரித்து, நாள்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டி தீட்டுக்கல் சாலை வழியாக, உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், மண்வள ஆராய்ச்சி மையம், பார்சன்ஸ் வேலி அணை மற்றும் குப்பைக் குழி ஆகியவை உள்ளன. தவிர, குருத்துக்குளி, மேல் கவ்வட்டி, தோடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அதிகளவில் உள்ளதால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, இச்சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில், பல இடங்களில் பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குழிகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் இயக்குவதில் சிரமம் அதிகரித்துள்ளது.
இதனால், நாள்தோறும் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். 'பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இச்சாலையை சீரமைக்க வேண்டும்,' என, பலமுறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊட்டி நகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.