/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த 'இன்டர்லாக்' கற்கள் :வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம்
/
சேதமடைந்த 'இன்டர்லாக்' கற்கள் :வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம்
சேதமடைந்த 'இன்டர்லாக்' கற்கள் :வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம்
சேதமடைந்த 'இன்டர்லாக்' கற்கள் :வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம்
ADDED : ஜன 02, 2024 10:29 PM

கூடலுார்:முதுமலை தேசிய நெடுஞ்சாலையில், 'இன்டர்லாக்' கற்கள் சேதமடைந்து வருவதால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், தொரப்பள்ளி முதல் தமிழக கர்நாடக எல்லையான கக்கனல்லா வரையிலான சாலை, முதுமலை வனப்பகுதியில் செல்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் மிதமான வேகத்தில், எச்சரிக்கையுடன் செல்லும் வகையில் வேக தடைகள் அமைத்துள்ளனர்.
சாலைகள் அடிக்கடி சேதமடையும் பகுதிகளில் மட்டும் தார்சாலைக்கு மாற்றாக 'இன்டர்லாக்' கற்கள் பதித்துள்ளனர். கார்குடி அருகே, சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் சேதமடைந்து வருவதால், அப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'சேதமடைந்து வரும் இப்பகுதியை, வாகனங்கள் சிரமப்பட்டு கடந்து செல்ல வேண்டி உள்ளது.
அப்பகுதி மேலும் சேதம் அடைந்து வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.