/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான மைசூரு நெடுஞ்சாலை; 3 மாநில ஓட்டுனர்கள் அதிருப்தி
/
சேதமான மைசூரு நெடுஞ்சாலை; 3 மாநில ஓட்டுனர்கள் அதிருப்தி
சேதமான மைசூரு நெடுஞ்சாலை; 3 மாநில ஓட்டுனர்கள் அதிருப்தி
சேதமான மைசூரு நெடுஞ்சாலை; 3 மாநில ஓட்டுனர்கள் அதிருப்தி
ADDED : ஆக 05, 2025 10:42 PM

கூடலுார்; முதுமலை அபயாரண்யம் அருகே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து, கர்நாடகாவுக்கு மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. அதில், தொரப்பள்ளியில் இருந்து, தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா வரை முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. இப்பகுதி சாலை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டதால், பெருமளவில் நல்ல நிலையில் உள்ளது.
ஆனால், அபயாரண்யம் -கார்குடி இடையில், சாலை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையில், சாலை மேலும், சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இச்சாலையில், இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகனங்கள் இயக்க தடை வித்துள்ளனர். இதனால், பகல் நேரங்களில் மட்டுமே சாலையை பயன்படுத்த முடிகிறது. எனவே, குறித்த நேரத்தில் வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.