/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த பாடந்துறை -வாச்சிக்கொல்லி சாலை
/
சேதமடைந்த பாடந்துறை -வாச்சிக்கொல்லி சாலை
ADDED : செப் 26, 2025 09:09 PM

கூடலுார்:
கூடலுார் தேவர்சோலை அருகே, சேதமடைந்துள்ள பாடந்துறை -வாச்சி கொல்லி சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார், தேவர்சோலை சாலை, பாடந்துறை பகுதியில் இருந்து, வச்சிக்கொல்லி சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை ஆழவயல், பொன்வயல், மூச்சிகண்டி, கருக்கபாலி, சுண்டவயல், வாச்சிக்கொல்லி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்காக, கூடலுாரில் இருந்து பாடந்துறை வழியாக மூச்சிகண்டிக்கு இரண்டு மினி பஸ்களும், வாச்சிக்கொல்லி வழியாக, மூன்றாம் 'டிவிஷன்' பகுதிக்கு ஒரு மினி பஸ் இயக்கி வருகின்றனர்.
இதை தவிர தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், விவசாய விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் அதிகளவில் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை பல இடங்களில், சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில்,நீர் தேங்கி, சாலை மேலும் சேதமடைந்துள்ளது. அதனால் வாகனங்கள் இயக்கவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.